நடிகர் சூர்யாவின் 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை ஏற்கனவே விஜய்சேதுபதிக்காக விக்னேஷ் சிவன் வைத்திருந்த ‘காத்து வாக்குல காதல்’ என்ற படத்தின் கதைதான் என்றும், அந்த கதையைத்தான் சூர்யாவுக்காக சற்று மாற்றியுள்ளார் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் விக்னேஷ் சிவன் தரப்பினர் இந்த வதந்தியை மறுத்துள்ளனர். சூர்யாஅ 35 படத்தின் கதை புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படம் என்றும் இதற்கும் ‘காத்து வாக்குல காதல்’ கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சூர்யா-விக்னேஷ் சிவன் இணையும் சூர்யா 35 திரைப்படம் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.