Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியில் தயாராகும் சூர்யாவின் 24.. ஒரு வழியா சூப்பர் ஸ்டாரை வளைத்து போட்ட இயக்குனர்

தமிழில் வெற்றி நடைபோடும் படங்களில் வெகு சில படங்களை இந்தியில் ரீமேக் செய்வார்கள். அந்த வரிசையில் 2016-ல் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் 24.
இத்திரைப்படத்தின் நேரம் மற்றும் காலைத்தை கடக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் அடிப்படையில் கதைக்களம் இருக்கும். சூர்யாவின் எதார்த்தமான நடிப்பில் வெற்றிநடை போட்ட இப்படம் ஒரு பிரபல இந்தி திரைப்பட இயக்குனரின் பார்வையில் படாமலா இருக்கும்.

suriya-24-movie-remake
அவ்வளவுதான் உடனாடியாக இப்படத்திற்கான இந்தி ரீமேக்கிற்கான உரிமம் கேட்டு விக்ரம் குமாரை அழைத்துள்ளார் அந்த பிரபல இயக்குனர். இயக்குனர் விக்ரமும் பச்சைக்கொடி காட்ட இந்தியில் தயாராகிறது 24.
அதற்கான நட்சத்திரத்தேடலில் சூர்யாவின் கதாப்பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார் என்றும், அதற்காக அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Hrithik-Roshan
கடந்த சில வருடங்களாக ஹிருத்திக்கை திரையில் பார்க்காத ரசிகர்கள். விரைவில் தமிழ் ரீமேக்கின் இந்தி படத்தின் சில போஸ்டர்களை எதிர்பார்க்கலாம்.
