இம்சைஅரசன் பாகம் இரண்டை படு ஸ்பீடாக ஆரம்பித்தார் இயக்குனர்.இயக்குனர் ஷங்கரும் பெரும் பட்ஜெட்டில் படத்தை எடுக்க ஒப்புக்கொள்ள வேலைகள் துரிதமாக நடந்தது.

ஆனால் வைகைப் புயல், எல்லாம் ஆரம்பித்த பிறகு இழுத்தடிக்க ஆரம்பித்தார். அது நொள்ளை..இது சொள்ளை என்று தொட்டதற்கும் பிரச்சனைகள் பண்ண நொந்து போனார் இயக்குனர்.

அதை எல்லாம் விட முக்கிய இதழ் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்ததுதான்  ஹைலைட் ஷாக். பேசிய கோடிகளை விட இன்னும் சில போட்டுக் கொடு என்று கேட்க கடுப்பின் உச்சத்துக்கே போனது தயாரிப்பு தரப்பு.

இப்போது புயலைத் தூக்கிவிட்டு பரோட்டா சூரியை இம்சைஅரசன் இரண்டாம் பாகத்தில் நடிக வைக்க பேச்சு ஆரம்பம் ஆகிவிட்டதாம்.

இயக்குனர் நினைத்தால் யாரையும் ஹீரோவாக்க முடியும் என்கிற தைரியத்தில் சூரியை வைத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.