CSK

சி எஸ் கே – ஐபில் 2018

இரண்டு வருட தடை முடிந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளது. சென்னையில் தற்பொழுதே கோலாகலம் கலை கட்ட துவங்கிவிட்டது புதிய டீம் உறுப்பினர்கள், புது டீம் பாடல், ஏர்செல் நிறுவனம் இல்லாத காரணத்தால், புதிய ஜெர்சி ஸ்பான்சர் என்று டீம்மை ப்ரொமோட் செய்து பிஸியாக உள்ளது அணி நிர்வாகம்.

CSK

அஸ்வின் தவிர்த்து பல பழைய வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் இணைந்துள்ளனர் இந்த அணியில். தோனி, ரெய்னா, பிராவோ, ஜடேஜா, டுப்லெஸி, மேலும் முரளி விஜய் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார்கள். இவர் தவிர்த்து தாக்குர், ஹர்பஜன், ராயுடு, ஜாதவ் போன்ற புதிய வீரர்களும் இணைந்துள்ளார்.

ஒருபுறம் முரட்டு ப்ராக்டிஸ் மறுபுறம் விளம்பர ஷூட்டிங் என்று செல்கிறது இந்த அணி. ஏற்கனவே ஹர்பஜன், தாஹிர் போன்றவர்கள் தமிழில் ட்வீட் போட்டு அசத்த, சுரேஷ் ரெய்னாவும் தன பங்கிற்கு லோக்கல் ஹீரோ முரளி விஜயுடன் இணைந்து நிர்ப்பது போன்ற போட்டோவை தன் ட்விட்டரில் அப்லோட் செய்துள்ளார்.

Murali Vijay Suresh Raina

நாங்கள் இணைந்து கலக்குவோம் என்றும் கூறியுள்ளார்.