காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரச்சினை நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 தீவிரவாதிகள், 4 உள்ளூர்வாசிகள் மற்றும் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டரான அப்ரிடி தன் ட்விட்டரில் காஷ்மீர் குறித்த கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

Shahid_Afridi_Kohli_Indian_Team_CT
Shahid_Afridi

“இந்தியா ஆக்கரமிப்பு காஷ்மீரில் அபாயகரமான மற்றும் கவலைக்கிடமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஆட்சியால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுங்கள். அந்த மக்களுக்கு விடுதலை பெற்று தாருங்கள். ஐநா சபை மற்றும் பிற சர்வதேச தன்னார்வ அமைப்புகள் எங்கே?. அவர்கள் ஏன் இந்த ரத்த வெல்லத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என பதிவு செய்திருந்தார்.

இந்த டீவீட்டினால் இந்தியாவில் பலரும் கடுப்பாகினர். மேலும் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்கின்றனர். அபிரிடிக்கு எதிராக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தன் கருத்தை கூறியுள்ளார்,

“காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான அங்கம், அவ்வாறு தான் எப்பொழுதுமே இருக்கும். காஷ்மீரில் தான் எனது மூதாதையர் பிறந்தார்கள். அப்ரிடி உங்களால் முடிந்தால் பாகிஸ்தான் ராணுவத்தின் தீவிரவாதத்தையும், அவர்கள் காஷ்மீரில் நடந்தும் தேவையற்ற சண்டையை நிறுத்த சொல்லுங்கள். நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். வன்முறையை அல்ல.” என்று டீவீடீயுள்ளார்.

கவுதம் கம்பிர்

நேற்று அபிரிதியின் டீவீட்டால் கடுப்பான காம்பிர் “காஷ்மீர் குறித்த அஃப்ரிடி கருத்து பற்றி மீடியாக்கள் என் தரப்பு ரியாக்ஷன் என்ன என்று கேட்கிறார்கள். சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஐநா (UN) என்பது அவரது மட்டமான அகராதியில் UNDER NINTEEN (19 வயதுக் குட்பட்டவர்கள்) என்றுதான் அர்த்தம். அவரது வயது வரம்பு. அவ்வளவு தான். மீடியா கூலாக இருங்கள் . நோ-பாலில் விழுந்த விக்கெட்டுக்குக் கொண்டாடும் அஃப்ரியைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்’ என பதிவிட்டிருந்தார்.

GG