Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

துபாயில் நடக்கும் மீதி ஐபிஎல் போட்டிகளில் விளையடுவாரா? வைரலாகுது ரெய்னாவின் ஸ்டேட்டஸ்

சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் . டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் மற்றும், டி20 போட்டிகளில் இவரது ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். டி20 போட்டிகளின் ராஜா, மிஸ்டர் ஐபிஎல் எனவும் பலரால் அழைக்கப்பட்டார்.

இந்திய ரசிகர்களை விட தமிழக ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனிக்கு பிறகு அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் என்றால் அது சின்ன தல சுரேஷ் ரெய்னா தான்.

அப்பேர்பட்ட சுரேஷ் ரெய்னா சென்ற ஐபிஎல் சீசனில் சொந்த விருப்பம் காரணமாக இந்தியா திரும்பினார். தனது உறவினர்களுக்கு ஏற்பட்ட சோகம் மற்றும் கொரானா அச்சுருத்தல் காரணம் என ஒரு தரப்பு சொன்னது. மறுபுறம் ரெய்னா கேப்டன்சி எதிர்பார்த்தார், பால்கனி ரூம் கேட்டார் , நிர்வாகத்துடன் சலசலப்பு எனவும் பேசினார்கள். ஆனால் இந்த வருட போட்டிகளுக்கான டீம்மில் ரெய்னா அவர்கள் தக்கவைத்து நிர்வாகம். அவரும் போட்டிகளில் ஆடினார்.

சென்ற சீசன் ரெய்னா இல்லாதே தோல்விக்கு காரணம் என பரவலாக பேசப்பட்டது, ஆனால் இம்முறை கூட்டு முயற்சி காரணமாக டீம் முதல் பாதி ஐபிஎல் இல் வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் துபாயில் சந்திக்கிறேன் என தோனியுடன் உள்ள போட்டோவை பகிர்ந்து சி எஸ்கே டீம்மையும் டேக் செய்துள்ளார்.

suresh raina

இதனால் இம்முறை ஐபிஎல் இரண்டாம் பாதி ரெய்னா விளையாட போவதை அறிவித்துள்ளார் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில். எனவே அவர் செப்டம்பர் மாதம் அங்கு சென்று விளையாடுவது உறுதி ஆகிவிட்டதே.  இதன் பின் யாரும் மீம்ஸ் போட மாட்டார்கள் என நம்புவோமாக.

Continue Reading
To Top