சுரேஷ் மேனன்

சினிமா மீது அதீத காதல் கொணடவர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என அந்த காலகட்டத்தில் பன்முகக் கலைஞனாக இருந்தவர். பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தவர். 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ‘சோலோ, தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் வாயிலாக கம் பேக் கொடுத்துள்ளார்.

ajith shalni wedding

இந்நிலையில் இவரின் பழைய பேஸ்புக் போஸ்ட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகின்றது. சுரேஷ் மேனன் மற்றும் அஜித் ஆரம்ப காலம் முதலே நல்ல நண்பர்கள். சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்கள்’ படத்தில்தான், ‘தல’ அஜித் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார்.

அந்த கதாபாத்திரத்திற்கு அஜித் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FB

“1993- ஆம் ஆண்டு, நான் இயக்கிய பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு நிமிடம் மட்டுமே வரும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்பொழுது பெரிய செபிரிட்டி ஆகியுள்ள நிலையிலும் அன்று போல் நட்போடு அஜித் உள்ளார். இன்று அவரது சம்பளம் 25 கோடியாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு நிமிட காட்சிக்காக அவர் வாங்கியது வெறும் 2500 ரூபாய் மட்டுமே .” என சுரேஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here