Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கில்லாடி கிங்.. இனி ஸ்கிரிப்ட் யார வச்சு பண்ண போறீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு புது திருப்பம் நேற்று ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் கமல், வீட்டில் உள்ள ஒருவரை எவிக்சன் மூலம் வெளியே அனுப்புவது வழக்கம்.

அந்தவகையில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டது பலதரப்பட்ட பிக்பாஸ் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

ஏனெனில் இந்த பிக்பாஸ் சீசனில் தொடங்கிய முதல் நாளிலிருந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பராக கேம் ஆடியவர் தான் சுரேஷ் சக்ரவர்த்தி.

மேலும் இவர் வயதை கூட பார்க்காமல் போட்டி என்று வந்துவிட்டால் இறங்கி  விளையாடுவார். ஆனால் திடீரென இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

இது குறித்து அவருடைய ரசிகர்கள், ‘இது நியாயமற்ற செயல். எங்களது ஓட்டுக்கு மரியாதை இல்லையா?’ என சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

suresh-eviction-cinemapettai

suresh-eviction-cinemapettai

எனவே சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பார்த்த நெட்டிசன்கள், ‘இனி கண்டண்டுக்கு கண்டிப்பா பஞ்சம் தான்’ என்று சோகக் கடலில் மூழ்கியுள்ளனர்.

Continue Reading
To Top