Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்று பிக் பாஸ் வீட்டில் வெளியேற போவது இவர்தான்.. அப்போ சண்டை இருக்காதா.? கவலையில் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது.
அதற்கேற்றாற்போல் தினம்தோறும், இந்நிகழ்ச்சியில் புது புது டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. அப்படி நேற்று நடந்த டாஸ்கில் வீட்டில் இருக்கும் 16 போட்டியாளர்களை வரிசைப்படுத்த வேண்டும்.
அதில் முதலிடம் பிடித்தவர் வெற்றியாளராக கருதப்படுவார். கடைசி இடம் பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த சூழலில்தான் அந்தப் போட்டியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார் மொட்ட பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி.
இவர் வீட்டில் கொளுத்திப் போடுவது, அதன்பின் அதை பார்த்து குளிர்காய்வதிலும் கெட்டிக்காரர்.
எனவே ‘நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்’ என்பதற்கேற்ப சுரேஷ் கொளுத்திப் போடும் ஒவ்வொரு பிரச்சினையையுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருவிருப்புக்கு காரணமாக அமையும்.
அப்படியிருக்கும் சுரேசை இந்த வாரம் எலிமினேட் செய்தால், நிச்சயம் இந்த கேம் ஷோ செம போர்ரடிப்பது மட்டுமில்லாமல், நெட்டிசன்கள்களும் கண்டெண்ட்டுக்காக காய போகின்றனர்.
அதனால் இந்த வாரம் எந்த ஒரு போட்டியாளரும் எலிமினேட் ஆவதற்கான வாய்ப்பு இல்லையாம்.

big-boss-4
