பிசிசிஐ நிர்வாக அமைப்பு தொடர்பாக பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாத நிர்வாகிகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. லோதா பரிந்துரைகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிரூத் சவுத்ரி ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதிகம் படித்தவை:  டோனி பேசிய பேச்சு: கோஹ்லியிடம் சொன்ன வார்த்தை

நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக நிர்வாகிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியது. பிசிசிஐ நிர்வாகிகள் உரிய விதத்தில் செயல்படவில்லை என்றால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அதிகம் படித்தவை:  தோனிக்கு , ஷமி சரியான பாடம் கற்றுக்கொடுத்தார்.! ஷமி,ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது தோனி..!

மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அத்துடன் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, அனிரூத் சவுத்ரி ஆகியோர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.