கூடங்குளம் அணு உலையில் தற்போது 2 அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 4 அலகுகள் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

3 முதல் 6 வரையிலான 4 அலகுகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு பரிந்துரைத்த நிறுவனம் போலியான நிறுவனம் என்றும் எனவே கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறை மண்டலம் அளித்த ஒப்புதல் செல்லாது எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணு உலையின் 4 அலகுகளுக்கும் கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறை மண்டலம் எப்படி ஒப்புதல் அளித்தது என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேசிய எரிசக்தி ஆணையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் 4 அலகுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும் கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.