mersal

ஜிஎஸ்டி வரி வசனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

mersal

‘மெர்சல்’ படத்தின் வசூல் இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அன்று மாலை முதலே ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாஜக கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள்.

அதிகம் படித்தவை:  தெறி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும், தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் ட்வீட் செய்யவும் செய்தார்கள்.

இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்தே வசனங்கள் அல்லது காட்சிகள் நீக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதனால் உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘மெர்சல்’.

அதிகம் படித்தவை:  உலக அளவில் யார் நம்பர் 1 ? வெளிவந்த உண்மை ரிப்போர்ட்
mersal movie review
mersal vijay

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடிகர் விஜய்க்கும், தயாரிப்பாளர் முரளிக்கும் எச்சரிக்கை விடும் வகையில் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி கடுமையாக மிரட்டியுள்ளார்.

விஜய் மத பிரிவினையை தூண்டியுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதோ, அந்த வீடியோ,