Tamil Nadu | தமிழ் நாடு
பட்டுனு இபிஎஸ் பக்கம் பல்டி அடித்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும் அரசியல் களம்!
தமிழகத்தில் தற்போது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் தற்போது அதிமுகவில் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருவது முதல்வர் வேட்பாளர் யார் என்பதே. இதற்காக சில காலங்களாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களை தனித்தனியே பெருக்கிக் கொண்டு வந்தனர்.
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் தாறுமாறாக இபிஎஸ்-ன் பக்கம் பல்டி அடித்து வருவது முதல்வர் எடப்பாடிக்கு அதிக வலுவையும் ஓபிஎஸ்- க்கு அதிக வலியையும் அளித்துள்ளது.
தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். அதையடுத்து ஏற்பட்ட பல மாற்றங்களின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இதையடுத்து நடந்த ஓபிஎஸ்- ன் கட்சி விலகல், அதிமுகவின் அமைதிப் பேச்சுவார்த்தை, ஓபிஎஸ் -ன் துணை முதலமைச்சர் பதவி ஆகிய அனைத்து அரசியல் நாடகங்களும் நாம் அறிந்த ஒன்றே.
மேலும் அதிமுக செயற்குழு கூட்டத்தில், இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே எழுந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை குறித்த வாக்குவாதத்தை அடுத்து, அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் முதல்வர் எடப்பாடிக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாதிரியான கட்சியின் போக்கி கவனித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போது அதிமுகவில் இபிஎஸ்- ன் பலம் பலமடங்காக அதிகரித்து உள்ளது.
இதனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார். இதுவே கட்சியில் உள்ள அனைவரின் ஒருமித்த முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
