Politics | அரசியல்
சூப்பர் ஸ்டாரின் அரசியல் அறிவிப்பு எப்போது.? ஏமாத்து வேலை என ஏளனமாக பார்க்கும் எதிர்கட்சிகள்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சினிமா துறையில் சாதித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு இருக்க ரஜினியின் கட்சி அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பினை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. இவ்வகையில் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பற்றி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி, ரஜினியின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
மேலும் இந்த அறிவிப்பால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது மக்களின் கருத்தாகும்.
இதற்கிடையில் தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்னதாக முதல்வர் வேட்பாளர் பெயரை ரஜினி அறிவிக்க உள்ளதால், இதற்குப் பின்னாலுள்ள திட்டம் என்ன என்பது குறித்து மற்ற கட்சியினர் தீவிரமாய் ஆலோசித்து வருகின்றனர்.

rajini-villain
மேலும் கட்சியின் வேட்பாளரை அறிவித்த பின் ஒரே கட்டத்தில் முழுமூச்சாக தேர்தல் பணியில் சூப்பர் ஸ்டார் ஈடுபட உள்ளதாகவும், அதற்கான திட்டங்களை அவர் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும்பாலோனோர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
