Connect with us
Cinemapettai

Cinemapettai

சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட நெருப்புடா!

neruppuda

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட நெருப்புடா!

நடிகர் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் நெருப்புடா திரைப்படம் இன்று வெளியானது. தற்போது வரை இந்த படம் குறித்து நடுத்தரமான விமர்சனங்களை பெரும்பான்மையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் விக்ரம் பிரபுவை பாராட்டியுள்ளார். இந்த படத்தில் அவர் நன்கு நடித்திருப்பதாகவும், நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் சூப்பர் ஸ்டார் விக்ரம் பிரபுவை பாராட்டியுள்ளார்.

மேலும் இது போன்ற வித்யாசமான கதை களத்தை தொடர்ந்து தேர்வு செய்து நடிக்குமாரு விக்ரம் பிரபுவிற்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.

இதனால் விக்ரம் பிரபு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். இது குறித்து அவர் கூறுகையில் ‘சூப்பர் ஸ்டார் நான் நன்றாக நடித்த படங்களை எப்போதும் பாராட்டத் தவறியதில்லை, அவரது பாராட்டு எனக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். இது போன்ற பாராட்டுக்களை அவரிடமிருந்து தொடர்ந்து பெறுவதற்கு கட்டாயம் உழைப்பேன்.

இந்த பாராட்டு எனக்கு மட்டும் உரித்தானதல்ல, என்னோடு பணிபுரிந்த எனது சக படக்குழுவினருக்கும் உரியது. இந்த மகிழ்ச்சியை அவர்களோடு பகிர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஐயாவே சொல்லிட்டாரா அப்புறம் ஏது அப்பிளு?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top