சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட அந்த மூன்று விஷயம்.. வெளிப்படையாக எல்லா மேடைகளிலும் சொல்லும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ரஜினி ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்து நிலையில் அதன் பிறகு தான் சினிமாவில் நுழைந்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.

ரஜினி எப்போதுமே புகழ் போதையை விரும்பாதவர். எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் அதே பண்புடன் தான் நடந்து கொள்வார். ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ரஜினி வெளியில் வரும் போது வீட்டில் எப்படி இருப்பாரோ அதேபோல் தான் காட்சியளிப்பார்.

Also Read : சூப்பர் ஸ்டாரை சரமாரியாக விளாசிய ரோஜா.. விஷயம் தெரியாமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட ரஜினி

இந்நிலையில் ரஜினி ஆசைப்பட்டது மூன்றே விஷயம் தான். அதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லையாம். அப்போது அந்தச் சமயத்தில் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் மூன்று விஷயங்கள் மட்டும்தான்.

முதலில் ரஜினி எதிர்பார்த்தது என்றால் தினமும் செலவுக்கு 500 ரூபாய். அப்போது ரஜினி மது அருந்துதல், புகைப்பிடிப்பது என சில கெட்ட பழக்கத்துடன் இருந்தார். அதுமட்டுமின்றி ரஜினி ஒரு அசைவ பிரியர். அவருடைய கெட்ட பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து பிரித்தது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தான்.

Also Read : உறுதி செய்யப்பட்ட தலைவர் 171.. சம்பளம் எல்லாம் முக்கியமில்ல, இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

இதை ரஜினியே பலமுறை கூறியிருக்கிறார். அடுத்ததாக ரஜினி ஆசைப்பட்டது படங்களில் ஒரு சின்ன ரோல் கிடைத்தால் போதும் என்பது. அதாவது சினிமாவில் நுழையும் போது ரஜினி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதுபோல ஏதாவது கிடைத்தால் போதும் என்று தான் அவருடைய எண்ணமாக இருந்துள்ளது.

கடைசியாக 500 ரூபாய் வாழ்க்கையில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என ரஜினி எப்போதுமே நினைப்பதுண்டாம். இந்த மூன்றும் இருந்தால் போதும் என்று நினைத்த ரஜினி இப்போது இமாலய உயரத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழியிலும் ரஜினி தான் என அடைமொழியாக உள்ளது.

Also Read : உதவின்னா எப்படி செய்யணும்னு ரஜினிய பார்த்து கத்துக்கோங்க கமல் சார்.. இத சுயநலம்னு எப்படி சொல்ல முடியும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்