Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி விருப்பப்பட்டு நடிக்க முடியாமல் போன ஒரே படம்.. வெறும் புகைப்படத்தோடு முடிந்த கதை
ஒரு நடிகருக்கு 70 வயது ஆகியும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருப்பது ரஜினி ஒருவருக்குத்தான். காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அதனால்தான் இன்றுவரை சூப்பர் ஸ்டாராக உள்ளார்.
90களில் அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் இன்றிருக்கும் யாராலும் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ரஜினியிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால், பெரிய இயக்குனர்கள் என்றாலும் சரி, திடீரென ஹிட் கொடுத்த இயக்குனர்கள் என்றாலும் சரி.அவர்களை அழைத்து கதை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சின்னக்கவுண்டர் படத்தை இயக்கிய ஆர்.பி. உதயகுமாரை அழைத்து கதை கேட்டுள்ளார். அது ரஜினியின் பொற்காலம். ஆனால் இயக்குனர் உதயகுமார் அப்பொழுதுதான் அறியப்படும் இயக்குனர்.
அதற்கு முன்பு அவர் உரிமை கீதம், கிழக்கு வாசல் போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் சின்ன கவுண்டர் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்தியது. அதன் பிறகு ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
உதயகுமார் ரஜினியிடம், யார் ஸ்டைலில் படம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ரஜினி, என்னுடைய ஸ்டைலில் கதை தயார் செய்யுங்கள் என கூறியுள்ளார். காரணம் அப்போதிலிருந்தே ரஜினி படங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் இருந்தது.
அப்போது தயார் செய்யபட்ட கதைதான் ஜில்லா கலெக்டர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த வார இதழ்களில் வெளிவந்தவுடன் இப்படத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது. பிறகு ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உதயகுமார் ஸ்டைலிலேயே கதை செய்யச் சொன்னார்.

jilla-collector
பயங்கர ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புபை கிளப்பியது. பிறகு அந்த படம் கைவிடப்பட்டு, ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஜில்லா கலெக்டர் படத்திற்கு கொடுத்த தேதியில் எஜமான் படத்தை எடுத்தார்.

jilla-collector-01
எஜமான் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறவில்லை. இருந்தும் மற்ற படங்களுக்கு இல்லாத வரவேற்பு ஜில்லா கலெக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு கிடைத்தது. ஆனால் இன்றுவரை உதயகுமார் அந்த கதையை வேறு யாருக்கும் சொல்லவில்லை என்பதுதான் உண்மை.

jilla-collector-02
ரஜினியை தவிர அந்தக் கதை வேறு யாருக்கும் பொருந்தாது எனக் நெற்றிப் பொட்டில் அடித்தது போலக் கூறி விட்டாராம்.
