பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த் திடீரென அவரது ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக சில விஷயங்கள் உள்ளன.
1. ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

2. ரஜினி மாவட்டம் தோறும் ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுப்பதால் ஏதேனும் நன்மை ஏற்பட்டதா?
3. தமிழக நலத்திற்காக ஏதேனும் புதிய கொள்கைகள் அவரது ரசிகர்கள் எடுத்துக்கொண்டனரா? போன்ற பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

பசுமை காடுகள்:

ரஜினியைப் போன்று கமல், அஜித், விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் பல லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்கள் நினைத்தால் ஒரு வருடத்தில் தமிழகத்தை பசுமை காடுகளாக மாற்ற முடியும்.

ஆம், கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் ரஜினியைப் போல தன் ரசிகர்களை புகைப்படம் எடுக்க அழைக்க வேண்டும். ஆனால் அதற்கு, ஒரு நிபந்தனையாக ஒரு செடியை நட்டு, அது குறிப்பிட்ட அளவு வளர்ந்த அளவில் புகைப்பட ஆதாரம் காட்டினால், அவருடன் புகைப்படம் எடுக்க தயார் என அறிவிக்க வேண்டும்.

அப்படி செய்தால், தமிழகம் அடுத்த ஒரு வருடத்தில் பசுமை பல்லத்தாக்காக மாறிவிடும். ரசிகர்கள் தான் எங்கள் தெய்வம் என கூறும் நடிகர்கள், தமிழகத்தை வளமாக்க இந்த முடிவை எடுப்பார்களா? கேள்விக்குரிய விஷயம் தான்.