fbpx
Connect with us

தொடர்ந்து பாக்ஸ் ஆபீசை மிரள விடும் இரண்டு தமிழ் நடிகர்கள்.. வாயடைத்து போன கோலிவுட் ஹீரோக்கள்!

actors

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து பாக்ஸ் ஆபீசை மிரள விடும் இரண்டு தமிழ் நடிகர்கள்.. வாயடைத்து போன கோலிவுட் ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒரு படம் ரிலீஸானால், அந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதை ரசிகர்கள் ஆவலுடன் சமூக வலைதளங்களில் அறிந்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித்  போன்றோரின்  படங்கள் என்றால் பாக்ஸ் ஆபிஸில் வசூலை தெறிக்க விடும்  என்பதை சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இரண்டு கதாநாயகர்கள் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தும், தளபதி விஜய்யும் தான்.

ஏனெனில் இவர்களுடைய படங்கள் எல்லாம் தாறுமாறாக பாக்ஸ் ஆபீஸில் வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் 2.0  ரூ. 700 கோடியையும், எந்திரன் ரூ. 290 கோடியும், தர்பார், பேட்ட  போன்ற படங்கள் ரூ. 200 கோடிக்கு மேலே வசூலை குவித்தது.

அதேபோல் தளபதி விஜயின் பிகில் ரூ. 300 கோடியையும், சர்க்கார் ரூ. 260 கோடியும், மெர்சல் ரூ. 200 கோடிக்கும் வசூலை தட்டிச்சென்றது.

எனவே ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்தே, அந்த படம்  வெற்றி பெற்றதா? அல்லது தோல்வியை தழுவியதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், தொடர்ந்து பாக்ஸ் ஆபீசை மிரள விட்ட சூப்பர்ஸ்டார் ஸ்டாரையும், தளபதியையும் அவர்களுடைய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இந்தப் புள்ளிவிவரத்தை பார்த்த மற்ற ஹீரோக்கள் வாயடைத்துப் போனார்கள்.

tamil-cinema-heros

tamil-cinema-heros

Continue Reading
To Top