Connect with us
Cinemapettai

Cinemapettai

தர்பாருக்கு பின் சூப்பர் ஸ்டார் செய்யவிருக்கும் தரமான சம்பவம்.. அடுத்த படத்தின் பக்காமாஸ் அப்டேட்

rajini-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பாருக்கு பின் சூப்பர் ஸ்டார் செய்யவிருக்கும் தரமான சம்பவம்.. அடுத்த படத்தின் பக்காமாஸ் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளியன்றும், படத்தின் டீசரை ரஜினியின் பிறந்தநாள் அன்றும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தை வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூலை ஈட்டியதால் உடனடியாக சிவாவை அழைத்து அவரிடம் கதை கேட்டார் ரஜினிகாந்த்.

சிவா கூறிய கதை ரஜினிகாந்துக்கு பிடித்துப்போக, உடனடியாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முன்வந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினியை வைத்து எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் லாபம் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் இசையமைப்பாளர் போன்ற தகவல்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண மாஸ் காட்டும் தலைவர்..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top