காலா படத்தினை தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவது நாம் அறிந்த விஷயமே. இந்நிலையில் தன் இயக்குனரின் முந்தய படத்தை பார்த்திட்டு, படக்குழுவையும் சந்தித்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

மெர்குரி

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா, சனத், தீபக் பரமேஷ், அனீஷ் பத்மன், ஷஷாங்க், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி. இப்படத்தில் வசனமே கிடையாது. சைலன்ட் திரில்லர் ஜானர்.

Mercury

தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இப்படம் ஏப்ரல் 13 ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இப்படத்தை ஏப்ரல் 20 தமிழகத்தில் ரிலீஸ் செய்தார். படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Karthik Subburaj super star

இந்நிலையில் இன்று படக்குழுவினரை நேரில் சந்தித்து, பிரபுதேவாவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, ஸ்டண்ட், தொழில்நுட்பம் எனப் படத்தில் தன்னைக் கவர்ந்த விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார் ரஜினி. மேலும் ” சூப்பர் படம்” என்றும் பாராட்டியுள்ளார்.

Mercury
Mercury
Mercury