Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா படத்தால் தனுஷ் மீது கோபத்தில் சூப்பர்ஸ்டார்…

தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ப்ரோமோஷன் சரியில்லாததால், ரஜினிகாந்த் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் என்றாலே மாஸ் தான். சாதாரண கதையில் கூட ரஜினி நடித்தால் சூப்பர் ஹிட் அடித்து விடும் என கோலிவுட்டினர் கண்ணை மூடிக்கொண்டே நம்பி வருகின்றனர். அவரின் ஒவ்வொரு படத்துக்கும் விளம்பரங்கள் சூடு பிடிக்கும். அதுவே படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் எகிறடிக்கும். அதிலும், கடந்த முறை ரஜினிகாந்த் நடித்து வந்த கபாலி படத்திற்கு ப்ரோமோஷன்கள் மலையளவில் இருந்தன. விமானம் முதல் கேக் வரை எல்லாவற்றிலும் விளம்பர மயம் தான். இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது.
ஆனால், அதை கபாலி படம் பூர்த்தி செய்யவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அப்படத்தின் ப்ரோமோஷன் பாடம் கோலிவுட்டினருக்கு புதிதாக அமைந்தது. கபாலி படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்து இருந்தார். இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காலா. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால், ரஜினியின் படம் என்ற விளம்பர யுத்திகள் கையாளப்படவில்லை. ரொம்பவும் சிம்பிள்ளாக எல்லா ப்ரோமோஷனும் அமைந்தது. இதுவே படத்திற்கு சரியான வரவேற்பை பெற்று தரவில்லை. காலா வெளியாகி 6ம் நாளான இன்றே திரையரங்கில் கூட்டமே இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் தனுஷ் தான் என ரஜினிகாந்த் நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ரஜினி, தனுஷ் மீது கோபம் கொண்டது மட்டும் இல்லாமல் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். அவருடன் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹீமா குரோஷி, அரவிந்த் ஆகாஷ் ஆகியோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
