தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து செல்லும். அந்த படத்தை இயக்கியது யார் என்று சொன்னால் நமக்கே ஒரு ஆச்சரியம் வரும், இந்த படத்தை இயக்கியது இவரா என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். அப்படி சில இயக்குனர்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

ஜெகன்

இளைய தளபதி விஜய்நடிப்பில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம் புதிய கீதை, இப்படம் தோல்வியை தழுவினாலும் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பேவரட், இந்த படத்தை இயக்கியது வேறு யாரும் இல்லை, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படத்தில் கலக்கிய ஜெகன் தான் இந்த படத்தின் இயக்குனர்.

சந்தானபாரதி

கமல்ஹாசனை வைத்து ஒருவர் படம் இயக்கினால் அவர் வெளியே தெரிய வாய்ப்பே இல்லை என்பார்கள், ஏனெனில் அந்த அளவிற்கு திரையில் கமல் அவர்களின் ஆளுமை இருக்கும், அந்த வகையில் குணா என்ற காலத்தால் அழிக்க முடியாத படைப்பை எடுத்தது யார் தெரியுமா?, காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் கலக்கும் சந்தானபாரதி தான். இவர் தான் மஹாநதி படத்தையும் இயக்கியது. இதுமட்டுமின்றி பல படங்கள் இவர் இயக்கியுள்ளார், ஆனால், நமக்கு இவரை நடிகராகவே தெரியும்.

அதிகம் படித்தவை:  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது பிக்பாஸ் சீசன் 2 ப்ரோமோ.!

சரவண சுப்பையா

சரவண சுப்பையா இவரை தெரியதா சிட்டிசன் பட இயக்குனர் என்று எல்லோரும் கூறலாம், ஆனால், உண்மையாகவே இவர் திரையில் பார்த்தவர்கள் இவர் தான் சரவண சுப்பையாவா என்று ஆச்சரியப்படுவார்கள், ஆம், போலிஸ் கதாபாத்திரத்திற்கு என்றே அளவெடுத்து செஞ்சது போல் பல படங்களில் போலிஸ் கதாபாத்திரத்தில் வந்து செல்வார்.

ரவிமரியா

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனம் கொத்தி பறவை என பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் ரவிமரியா, இவர் தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். ஆனால், இவர் தான் நடிகர் ஜீவா முதன் முறையாக திரையில் தோன்றிய ஆசை ஆசையாய் படத்தின் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  கபாலி ரீமேக்? அமிதாப் பச்சனுக்கு இதுதான் முதல் முறை !

ராஜ்கபூர்

ராஜ்கபூர் பல படங்களில் வில்லனாக நடித்தவர், இவர் இயக்கிய படங்களை சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தல அஜித்தை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

மனோபாலா

மனோபாலாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை, அந்த அளவிற்கு தன் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியவர், தற்போது வரும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ இவர் இருக்கிறார், ஆனால், இவர் எத்தனை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் தெரியுமா? தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்து அரண்மனை படத்தில் வரும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து வருகிறார். நம் சூப்பர் ஸ்டார்நடித்த ஊர்க்காவலன் படத்தின் இயக்குனர் இவர் தான்.