fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் களமிறங்கும் விக்ரம்.. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அசரடிக்கும் கூட்டணி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் களமிறங்கும் விக்ரம்.. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அசரடிக்கும் கூட்டணி

விக்ரம் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக பெரிய அளவு வெற்றி இல்லையென்றாலும் சிறு அளவு கூட வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பெரிதும் கவலையில் உள்ளாராம் விக்ரம்.

இனி நடிக்கும் படங்களில் தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இமைக்காநொடிகள் டிமாண்டி காலனி போன்ற படங்களை இணையத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது. இந்நிலையில் இந்த லாக்டோன் சமயத்தில் விக்ரமிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டாராம் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த படம் பெரும்பாலும் கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Continue Reading
To Top