Tamil Cinema News | சினிமா செய்திகள்
உச்ச நடிகரையே காண்டாக்கிய நடிகை.. படக்குழுக்கு ஷாக்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொத்த சினிமா உலகமும் புகழும் நடித்தா இவருடன் தான். இவர் நடிப்பதாக இருந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் தயார் என்ற அளவுக்கு புகழ் பெற்ற நடிகை அவர். ஆனால் அவர் சம்பள பாக்கி பிரச்சனையால் உச்ச நடிகரின் கடைசி நாள் படப்பிடிப்பு வராமல், படக்குழுக்கு ஷாக் கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
தெலுங்கிலும், தமிழிலும் தவம் கிடக்கிறார்கள் அம்மணியிடன் ஆட்டம் போட்டு நடிக்க.. ஆனால் இவருக்குத்தான் என்னவோ எல்லாமே பிடிப்பதில்லை. செலக்டிவாகத்தான் நடிப்பார். படம் பிச்சுக்கொண்டு ஓடும். அதனால் கோடிகளை கொட்டி நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனங்கள் கியூவில் இருக்கின்றன.
இவர் தான் தென்னிந்தியாவிலேயே அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை என சொல்லிக்கொள்கிறார்கள். இவர் சம்பள விஷயத்தில் கராராக இருப்பாராம். அதேபோல் எந்த படத்தின் புரோமேசனிலும் பங்கேற்க மாட்டாராம். அண்மையில் இந்த நடிகையை உச்ச நடிகருடன் நடிக்க வேண்டும் என கோடிகளை கொட்டி தயாரிப்பு நிறுவனம் ஒகே வாங்கியது.
படம் சிறப்பாக உருவாகிவிட்டது. நடிகையும் அற்புதமாக நடித்து நல்லபெயரும் வாங்கிவிட்டார். ஆனால் முக்கியமான சில காட்சிகள் எடுக்க வேண்டியதிருந்ததாம். ஆனால் அதேசமம் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தராமல் தயாரிப்பு தரப்பு பிடித்து வைத்திருந்ததாம்.. அதைக் காட்டி புரொமோசனுக்கு நடிகையை வர வைத்து விடலாம் என அவர்கள் கணக்கு போட்டார்களா என்ன என்பது தெரியவில்லை.
ஆனால் நடிகை முக்கியமான காட்சிக்கு வராமல் இதனால் இயக்குநர் பதறிப் போய் இருக்கிறார். உச்சநடிகர் உட்பட படக்குழுவே காத்துக் கொண்டிருக்க, நடிகையோ மீதி சம்பளத்தைக் கொடுத்தால் தான் வருவேன் என கறாராகச் சொல்லி இருக்கிறாராம். பிறகு இயக்குநர் சமாதானப் படுத்தி, உங்க சம்பளத்திற்கு நான் கேரண்டி எனக் கூறி நடிகையை வர வைத்து எடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உச்ச நடிகருக்கும் வருத்தமாம்.
