கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது என்பது படக்குழுவை தாண்டி மக்களுக்கே தெரியும்.

அப்பட வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தையும் எடுத்திருந்தார். ஆனால் இடையில் என்ன பிரச்சனையோ படம் அப்படியே நின்றுவிட்டது. இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.

விஸ்வரூபம் 2 படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

Comments

comments