தளபதி 67 படத்திற்கு கிடைத்த மாஸ் அப்டேட்.. சென்டிமென்ட் பார்க்கும் லோகேஷ்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கதை களத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. தளபதி 66 படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால் அதிக பிரஷர் இல்லாமல் வேலையை நிதானமாக பார்த்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு சிறப்பாக எடுத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இப்போது தான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தில் பிரபு, சங்கீதா போன்ற படங்களில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு விஜய் தனது 67வது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து விக்ரம் படம் எடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 3ஆம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட்டான மாஸ்டர் படத்தின் பூஜையும் அக்டோபர் 3ஆம் தேதி தான் போடப்பட்டது.

இதனால் அதே சென்டிமென்ட்டை வைத்து லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் பூஜையும் அதே தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை எல்லாம் லோகேஷ் கனகராஜ் ரெடியாக வைத்துள்ளாராம்.

மேலும் இப்படத்தை எடுத்து முடிக்க 6 மாதம் மட்டுமே போதும் என சொல்கிறாராம் இயக்குனர். இதனால் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பது விரைவில் வெளியாகும். இவ்வாறு விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வர இருக்கிறது.

Next Story

- Advertisement -