Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடங்கியது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அடுத்த படம். சன் பிக்சர்ஸ் இன் அடுத்த பிரம்மாண்ட படைப்பு. அனிருத்தின் இசையில், திருவின் ஒளிப்பதிவில் உருவாக உள்ளது இப்படம்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். (அநேகமாக வில்லன் அவதாரம்) ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர். சனத் ரெட்டிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ்.

மேலும் இன்று காலா ரிலீஸானது. எனினும் பட ப்ரோமோஷன், அல்லது திரை அரங்க விசிட் என எதற்கும் செல்லாமல் சூப்பர் ஸ்டார் இந்த புது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்றதாக தகவல்கள் வெளியாகின.

ரஜினிகாந்த் மீண்டும் கருப்பு தாடி கெட்டப்பிற்கு மாறி இருக்கிறார். மேலும் படப்பிடிப்புகள் டார்ஜிலிங் பகுதியில் ஒரு கல்லூரியில் நடைபெற உள்ளது என்றும் சொல்லப்பட்டது. ரஜினி இப்படத்தில் பேராசிரியராக நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

எனினும் இதுவே மேற்கு வங்காளத்துக்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் சென்றுள்ளாராம். அங்கு 37 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறாராம். ஏற்கனவே 700 டெக்னீஷியன்கள் டார்ஜ்லீங் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும். அதில் 140 நபர்கள் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top