Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் தரிசனம் கொடுத்துள்ள ரஜினி.. காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ‘தல’ என்ற கௌரவத்துடன் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் அஜித் குமார். இவர் சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பினாலும் அயராத முயற்சியாலும் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான பில்லா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அஜித்தின் பில்லா படத்தில் ரஜினிகாந்த் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை இதுவரை யாரும் பார்த்ததே கிடையாது.
தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு தல ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
அதாவது 27 வருடங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் நடித்திருந்தார்.
மேலும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட பூஜையில், தல அஜித்தின் அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் கலந்து கொண்டாராம். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி தல ரசிகர்களால் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, ஓல்ட் பில்லாவும் நியூ பில்லாவும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, தல ரசிகர்களை தாறுமாறாக சந்தோஷப்படுத்தி உள்ளது.

Ajith-Rajini-Billa-Cinemapettai
