3 பேரை களையெடுக்க தயாரான கௌதம் கம்பீர்.. ரோகித்துக்குப் பின் இந்தியாவை தூக்கி நிறுத்தும் சூப்பர் ஸ்டார்

இந்தியா கொஞ்சம் கூட இலங்கைக்கு முன்னேறும் வாய்ப்பை கொடுக்காமல் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆனால் அடுத்து நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரில் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பி வந்தாலும் பிரயோஜனப்படாமல் செயல்பட்டு வருகிறது

இலங்கை புது உத்வேகத்துடனும், புது பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவுடனும் இந்தியாவை வீழ்த்துவோம் என காலரை தூக்கிவிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூறியதற்கு ஏற்ப ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கு சரியான பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். தங்களது சுழற்பந்து வீச்சால் இந்தியாவை விரட்டி அடிக்கிறார்கள்.

அணியில் கிட்டத்தட்ட ஆறு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் மூன்று முழு நேர பந்துவீச்சாளர்களும், 3 பகுதி நேர பந்துவீச்சாளர்களும் என அனைவரும் தத்ரூபமாக செயல்பட்டு இந்தியாவை திக்குமுக்காட செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதாக போட்டியை வெல்லும் இடத்தில் இருந்தாலும் சுழற்பந்து வீச்சை கையில் எடுத்து இந்தியாவை சுருட்டி விடுகிறார்கள்.

ரோகித்துக்குப் பின் இந்தியாவை தூக்கி நிறுத்தும் சூப்பர் ஸ்டார்

ரோகித் சர்மா ஆரம்பத்தில் ஆர்ப்பரித்தாலும் அதன் பின் வரும் வீரர்கள் சொற்பரன்களில் வெளியேறுகின்றனர். அவருக்கு பின் அணியை தூக்கி நிறுத்துவது அக்சர் பட்டேல் மட்டும்தான். தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையை முழுமையாக காட்டுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவை பரிதாபத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்கிறார்.

இந்தியாவின் புது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இருக்கும் மூன்று பேர் மீது காட்டம் காட்டி வருகிறார். போதிய வாய்ப்பு கொடுத்த போதிலும் திறமையை நிரூபிக்கவில்லை. பவுலிங் யூனிட்டில் அர்ஸ்தீப் சிங் மற்றும் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே இருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

இதனால் அடுத்து ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடக்க இருப்பதால் இந்திய அணியை கட்டமைக்கும் பொறுப்பு கேப்டன் மற்றும் புது பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சொதப்பும் வீரர்களை களையெடுக்க காத்திருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -