Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் நடிப்பதற்கு ஏங்கிய அந்த ஒரு கதாபாத்திரம்.. அசுரன் 100வது நாள் விழாவில் போட்டுடைத்த தாணு
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியுள்ள தனுஷின் பட்டாஸ் படம் கமர்சியல் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியமான தகவலை தயாரிப்பாளர் தாணு பகிர்ந்துள்ளார்.
அதாவது அசுரன் படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கலைபுலி S.தாணு சில தினங்களுக்கு முன்பு அசுரன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பார்த்ததாகவும், இடைவேளையின் முன்பு வரும் காட்சியில் தனுஷை பார்த்து பாஷா பாஷா என்று தட்டிக் கொடுத்தாராம்.
அதுமட்டுமல்லாமல் சிவசாமி கேரக்டரில் தான் நடித்திருக்கலாம் என்று தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். சிவசாமி ஊர்மக்களின் காலில் விழும் காட்சி மிகவும் மனதை வருடியாதாக கூறினாராம்.
இந்திய அளவில் அதிகமான சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஒரு கதாபாத்திரத்தை நடித்திருக்கலாம் என்று ஏங்கினாராம் அந்த தருணம் மகிழ்ச்சி தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள பட்டாஸ் படத்திற்கு சினிமா பேட்டடையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் படத்தின் திரைவிமர்சனம் பார்க்கலாம்.
