Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-mondru-mudichi

Entertainment | பொழுதுபோக்கு

வில்லாதி வில்லனாக ரஜினி நடித்த 6 படங்கள்.. பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கிய பாலச்சந்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து அசத்திய 6 படங்கள்.

நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார். இந்த நிலைக்கு வர ஆரம்ப காலங்களில் அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். ரஜினிக்கு எடுத்தவுடன் எல்லாம் ஹீரோ அந்தஸ்து கிடைத்துவிடவில்லை. ரஜினி முதலில் வில்லனாக தான் அவருடைய கலைப்பயணத்தை ஆரம்பித்தார். இன்று ஹீரோவாக அவர் இருந்தாலும் அவரை வில்லனாக பார்க்க வேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் கனவு. அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான வில்லத்தனத்தை காட்டியிருப்பார் சூப்பர் ஸ்டார்.

பதினாறு வயதினிலே: ரஜினிகாந்த் இன்று இந்த அளவுக்கு உச்ச நட்சித்திரமாக வந்துவிட்டாலும் இவர் நடித்த பரட்டை கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. இன்று வரை ரஜினியை பரட்டை என்று மறைமுகமாக சொல்லுபவர்களும் உண்டு. ரஜினிகாந்த் என்று ஒரு நடிகர் கோலிவுட்டில் இருக்கிறார் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளப்படுத்திய திரைப்படம் தான் பதினாறு வயதினிலே.

Also Read: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி

நெற்றிக்கண்: இப்போதுவரை வெளியான பிளேபாய் படங்களை ஒப்பிடும் போது , ரஜினியின் நெற்றிக்கண் படம் அளவுக்கு எதையும் சிறப்பாக சொல்லிவிட முடியாது. சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் ரஜினி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களின் மீது தீராத ஆசைகொண்டு அலையும் குணமாக இருக்கட்டும், குறும்பு கலந்த வில்லத்தனமாக இருக்கட்டும் ரஜினியை போல் யாராலும் நடிக்க முடியாது.

எந்திரன்: பல வருடங்களுக்கு முன் ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த கதாபாத்திரம் தான் எந்திரன் திரைப்படத்தின் சிட்டி. சற்றும் மாறாத குரல் அதிர்வு, உடல் அசைவு என அப்படியே பழைய வில்லன் ரஜினிகாந்தை நியாபகப்படுத்தியிருந்தார். ரஜினியின் சினிமா கேரியரில் யாராலும் மறக்க முடியாத கேரக்டர்களில் ஒன்று எந்திரன் படத்தின் சிட்டி கேரக்டர்.

மூன்று முடிச்சு: இயக்குனர் இமயம் பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் தான் மூன்று முடிச்சு. ரஜினி இந்த படத்தில் ரொம்ப கொடூர குணம் கொண்ட வில்லனாக நடித்திருப்பார். படத்தின் இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் காட்சிகள் பயங்கர பரபரப்பாக இருக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்துக்கு கமல் மற்றும் ஸ்ரீதேவியை விட சம்பளம் குறைவு என அவரே ஒரு மேடையில் சொல்லியிருந்தார்.

Also Read: ஜெயிச்சவங்க மட்டும் தான் ரஜினியோட கூட்டணி போட முடியும்.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

அவர்கள்: கமல், ரஜினிகாந்த், சுஜாதாவின் சிறந்த நடிப்பில் உருவான திரைப்படம் தான் அவர்கள். இந்த படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி சேடிஸ்ட் கேரக்டரில் நடித்திருப்பார். மனைவியின் திருமணத்திற்கு முன்னான காதலை தெரிந்தே திருமணம் செய்து அவளை கொடுமைப்படுத்தும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

காயத்ரி: எழுத்தாளர் சுஜாதாவின் காயத்ரி என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை வைத்து நீலப்படம் எடுப்பவராக ரஜினி நடித்திருந்தார். வியாபார ரீதியாக இந்த படம் தோல்வியுற்றாலும் ரஜினி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் மிளிர்ந்தார்.

Also Read: அங்க இருந்து வந்துட்டு இங்க நீ சூப்பர் ஸ்டாரா? எதார்த்தமாக பேசிய ரஜினியிடம் வன்மத்தை காட்டும் நடிகர்

Continue Reading
To Top