வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

எண்டு கார்டு போடறதுக்குள்ள ஒரு பிரம்மாண்ட வெற்றி கன்பார்ம் .. ரஜினி போடும் பலே திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை தற்போது ஒரு பான் இந்தியா மூவி லெவலில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், புஷ்பா படத்தில் நடித்த நவீன் மற்றும் பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதற்கிடையில் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங்கிலும் அவ்வப்போது கலந்து கொண்டிருக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படம் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறது என்றும் ஜெய் பீம் பட இயக்குனர் இந்த படத்தை இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read:அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படத்தை தாண்டி அவருடைய 171 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் அந்த படத்தோடு ரஜினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினியின் கடைசி படம் என்பதால் இது இப்போது அவருக்கு கனவு படமாகவும் இருக்கிறது.

ரஜினிக்கு தன்னுடைய கடைசி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து விட வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கனவு. அதற்கு அவர் தற்போது உள்ள இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்தால் இந்த ஆசை நிறைவேறி விடும் என்று நினைத்திருக்கிறார். இதனால் நேரடியாகவும் இயக்குனர் லோகேஷ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Also Read:ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

சமீபத்திய தகவலின் படி லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை விவாதத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இணைவதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் ஒரு பக்கம் கைதி படத்தின் தயாரிப்பாளர் ஆர் எஸ் பிரபு இரண்டாம் பாகத்திற்காக லோகேஷ் கனகராஜை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் உலகநாயகனும் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்காக லோகேஷை நெருக்கி கொண்டு வருகிறார்.

இதை தெரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே இறங்கி வந்து இவர்கள் இருவரிடமும் பேச இருப்பதாக தெரிகிறது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தை தனக்காக விட்டுத் தருமாறு பேச்சுவார்த்தையில் இறங்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதுவே ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவருமே அவருக்காக விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

- Advertisement -

Trending News