Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-villian-cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

ரஜினிகாந்த் வில்லனாக மிரட்டிய 6 படங்கள்.. சூப்பர் ஸ்டார் மோசமாக அலறவிட்ட படங்களின் லிஸ்ட்

40 ஆண்டு காலமாக நம்பர்-1 அந்தஸ்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற படங்கள் நமக்குத் தெரியும், ஆனால் முரட்டு வில்லனாக நடித்து வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்

மூன்று முடிச்சு: ரஜினிகாந்த் ஒரு ஆன்டி ஹீரோவாக அறிமுகமான படம். கே பாலசந்தர் இயக்கத்தில்,எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 1976-ல் வெளிவந்த படம் மூன்று முடிச்சு. இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்ரீதேவியை காதலித்து வலுகட்டையமாக அடைவதற்காக கமலஹாசனை கொள்ளும் அளவிற்கு கொடூர வில்லனாக நடித்து இருப்பார். ஸ்ரீதேவி இந்த படத்தில் நடிக்கும்போது வயசு 13.  ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு இந்த படம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

முழு படம் பார்க்க: YouTube

16 வயதினிலே: மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் 16 வயதினிலே. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது, ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்திலும் கமலஹாசன் சப்பாணி என்ற கதாபாத்திரத்திலும் நடிதுருபார்கள். ரஜினிகாந்துக்கு தற்போது வரை மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. இந்த படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு, பல விருதுகளையும் தட்டிச் சென்றது. கமலஹாசன் புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல் நடித்து இருப்பார். இந்த படத்திலேயும் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று ஒரு சில சித்து வேலைகளைச் செய்வார்.

முழு படம் பார்க்க: YouTube

ஆடு புலி ஆட்டம்: 1977 முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரஜினிகாந்த், சங்கீதா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் ஆடுபுலி ஆட்டம். வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினி வெற்றி கண்ட படங்களில் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் ரசிகர் மனதில் பதிய ஆரம்பித்தது இந்த படம் தான். படம் முழுவதும் ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று அவர் கூறும் வசனம் இன்று வரை ரசிகர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

முழு படம் பார்க்க: YouTube

காயத்ரி: பட்டாபிராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜெயசங்கர், ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் நடித்து 1977-ல் வெளிவந்த படம் காயத்ரி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்திருப்பார், ப்ளூ ஃபிலிம் தயாரிப்பாளராக பெட்ரூமில் நடக்கும் அந்தரங்களை வீடியோ பிடிப்பது போன்ற மோசமான வில்லனாக நடித்து இருப்பார். எப்படியாவது ஸ்ரீதேவியை ரஜினிகாந்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெய்சங்கர் போராடுவார், ஆனால் எதிர்பாராதவிதமாக காயத்ரி இறந்து விடுகிறார் இதுதான் படத்தின் கதை.

முழு படம் பார்க்க: YouTube

நெற்றிக்கண்: முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், லட்சுமி, சரிதா, மேனகா போன்ற பிரபலங்கள் நடிப்பில், இளையராஜா இசையில் 1981ல் வெளிவந்த படம் நெற்றிக்கண். ரஜினிகாந்த் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பா கதாபாத்திரத்தில் சக்கரவர்த்தி , டெக்ஸ்ஸ்டைல் தொழிற்சாலையில் முன்னிலையில் இருப்பவர் சக்கரவர்த்தி, ஆனால் பெண்களை அடிமைப்படுத்துவது போன்று கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தை நல்லவனாக மாற்றுவது தான் இந்த படத்தின் கதை.

முழு படம் பார்க்க: YouTube

எந்திரன்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் 2010ல் வெளிவந்த படம் எந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருப்பார். ரஹ்மான் இசை அமைத்திருப்பார், ஒரு எந்திரத்தை மனிதர்களுடன் இயல்பாக செயல்பட வைக்கும் போது அதனால் வரும் அறிவு மிகக் கொடூரமாக இருக்கும் என்பதை மிக தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்திருப்பார் ஷங்கர். இதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து அதுவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு படம் பார்க்க: YouTube

இப்படி தனது சினிமா வாழ்க்கையில் கமலஹாசனை எதிர்த்து முரட்டு வில்லனாக நடித்து தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து இருக்கிறார். ஒரு வகையில் அவர் மேடையில் கூறியது போன்று கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டு உள்ளார் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த இரண்டு ஜாம்பவான்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது கே பாலச்சந்தர் என்ற சிகரம் தானே.

Continue Reading
To Top