குருநாதர் சொன்ன இரண்டு விஷயம்.. தற்போது வரை கடைபிடிக்கும் சூப்பர் ஸ்டார்

தன்னுடைய ஸ்டைல், நடை, பேச்சு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இந்த அளவுக்கு இன்று பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டாக்டர் கோபாலி.

இவர் மீடியாவிற்கு தேவையான நடிப்பு, வசன உச்சரிப்பு போன்ற அனைத்தையும் கற்றுக் கொடுப்பவர். சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரங்களாக திகழும் அனைவருக்கும் நடிப்பை சொல்லிக் கொடுத்த குரு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இவர் நடிப்பு சொல்லிக் கொடுத்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்தை ஒருமையில் பெயர் சொல்லிக் கூப்பிடும் வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் மீது ரஜினிகாந்துக்கு தனி மரியாதை உண்டு. அதன் காரணமாக அவர் கூறிய இரண்டு விஷயத்தை ரஜினி மறுக்காமல் செய்தார். சூப்பர் ஸ்டார் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் அந்த ஸ்டைல் தான்.

பல படங்களில் இந்த ஸ்டைலை அவர் பின்பற்றியது உண்டு. ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுமாறு கோபாலி ஒரு முறை கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் அவர் சொல்லுக்கு மறுப்பு ஏதும் கூறாமல் தன் சிகரெட் பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.

மேலும் ஏழை மக்களுக்கு உதவும் படியும் கோபாலி கேட்டுக் கொண்டார் அதனால் ரஜினிகாந்த் இதுவரை தினமும் 750 பேருக்கு உணவு அளித்து வருகிறார். இதை ஒருபோதும் அவர் பிரபலமாக்கியது இல்லை. தன்னுடைய குருநாதர் மீது கொண்ட அன்பின் காரணமாக ரஜினிகாந்த் இந்த இரு விஷயங்களையும் தட்டாமல் செய்தார்.

கோபாலி இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இன்றும் அவரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள பல பேர் ஆர்வமாக உள்ளனர். தன்னைத் தேடி வரும் அத்தனை பேருக்கும் அவர் நடிப்பை கற்றுக்கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்