Tamil Cinema News | சினிமா செய்திகள்
இமயமலையில் சூப்பர் ஸ்டார்.. ஆரம்பமாகும் அடுத்த அரசியல் சாம்ராஜ்யம்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இமயமலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தர்பார் என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தீபாவளி அன்று தர்பார் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட் மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.
இந்த படத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னாடியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை சென்று உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அதில் வெற்றி பெறுவதற்காக இமயமலை சென்று உள்ளார் என்றும் ஒரு குரூப் கூறிக் கொண்டிருக்கிறது.
திரும்பி வந்ததும் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இமயமலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

rajini

rajini-01

rajini-02
