டெம்போ ஏற்றும் காம்பினேஷன்…உச்ச நட்சத்திரத்துடன் கை கோர்க்கும் விஜய் சேதுபதி…

விஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த முக்கிய தகவலால் கோலிவுட்டே ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறது.

பிரம்மாண்ட படைப்பான 2.O மற்றும் காலா என இரு படங்களின் ஷூட்டிங்கை முடித்து விட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அரசியல் கட்சி தான் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. பல முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லிய நிலையில், இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜுக்கு இந்த வாய்ப்பு கிட்டியது பலருக்கும் ஆச்சரியம் தான்.

அதிலும், படத்தின் தயாரிப்பு தரப்பு சன் பிக்சர்ஸ் என்பது படத்தின் கூடுதல் பலமாக பேசப்படுகிறது. படம் பிரம்மாண்டமாக இருக்காது. ஆனால், படத்தில் பிரம்மாண்டம் இருக்கும் என கார்த்திக் சுப்புராஜ் அடித்த ஸ்டேட்மெண்ட் என படத்தின் கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாயகிகள் வேட்டை ஒரு பக்கம் ஜரூர் வேகத்தில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், ரஜினிக்கு வில்லனாக மக்கள் செல்வன் மிரட்டலாம் எனவும் திரை வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகின்றன.ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா மற்றும் இறைவி படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார்.

vijay sethupathy
vijay sethupathy

அதுமட்டுமல்லாமல், பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கிசுகிசுக்கள் றெக்கை கட்டியது. ஆனால், இருதரப்புமே கப்சிப்பாக எதையுமே உறுதிப்படுத்தாமல் இருந்தது. ஆனால், ரசிகர்களோ இந்த காம்போ அமைந்தால் படம் எப்படி இருக்கும் என கற்பனை கோட்டையே கட்டி விட்டது. இந்த வேளையில் தான், இப்படி ஒரு அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு ஸ்வீட் ஷாக் கொடுத்து இருக்கிறது. விரைவில், நாயகிகள் குறித்த முக்கிய தகவலும் டுவீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.