Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த நடிகர் முன்னாடி விஜய் அஜித் எல்லாம் குழந்தைங்க.. தல, தளபதி சாதனையை அசால்டாக தூக்கி சாப்பிட்ட சூப்பர் ஸ்டார்!
தென்னிந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்களது வெறித்தனத்தை சமூக வலைதளங்களில் காட்டி சாதனையாக மாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நீண்ட நாட்களாக ட்விட்டர் போன்ற வலைதளங்களில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகமாக இருக்கும். இருவரும் மாறி மாறி சாதனைகளை வைத்துக்கொண்டே இருப்பார்கள்.
கொஞ்ச நாள் வரை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் மட்டுமே ட்விட்டரில் இருந்த நிலையில் சமீபகாலமாக அண்டை மாநில நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது ஹீரோவுக்கான புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
அதிலும் தெலுங்கு ஹீரோக்களுக்கு தற்போது ஏகப்பட்ட மவுசு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை விட தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்கள் இந்திய அளவில் படு பேமஸ்.
அந்த வகையில் டுவிட்டரில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 10 இலட்சம் டுவிட்டுகளை போட்டது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சாதனையை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அசால்டாக தூக்கி சாப்பிட்டு விட்டனர்.
தளபதி விஜய்யின் 10 லட்சம் பதிவுகளை விட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சுமார் 60 இலட்சம் அதாவது 6 கோடி பதிவுகளை பதிவிட்டு அசால்ட் செய்துள்ளனர். இதன் மூலம் தல தளபதி ரசிகர்கள் எங்களுக்கு சோட்டா பச்சா என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
இனி விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் மிகவும் உக்கிரமாக இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
