Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டாரின் படத்தில் 3வது முறையாக இணையும் மற்றுமொரு சூப்பர் ஸ்டார்.. ஒரே ட்விட் தெறிக்கும் இணையதளம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது படம் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, சூரி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூன்றாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைகிறார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நயன்தாரா ஏற்கனவே சந்திரமுகி மற்றும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தர்பாரில் ஏற்பட்ட விநியோகஸ்தர்கள் பிரச்சினையை தலைவர் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது நடக்கவில்லையாம்.

rajini-168
இந்த படத்தின் கதை வடசென்னையை மையமாக வைத்த கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நயன்தாரா நான்காவது கதாநாயகியாக இணைந்துள்ளது மேலும் ‘அண்ணாத்த’ படத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Lady superstar #nayantara
Joins the cast of #Thalaivar168#Superstar #Rajinikanth @directorsiva @sunpictures #Meena #Khushbu @KeerthyOfficial @prakashraaj @actorsathish @sooriofficial @immancomposer @RIAZtheboss @V4umedia_ pic.twitter.com/cBdCsPRxT3— Cinemapettai (@cinemapettai) January 31, 2020
