இது வரை வந்த கலக்கபோவது யாரு சீசன்களிலேயே அனைவராலும் அதிகம் வரவேற்கப்பட்டது சீசன் 5தான். அந்த சீசனில் ஆங்கராக அறிமுகமானவர்கள் ரக்சன் மற்றும் ஜாக்லின்l

இவர்கள் இருவரையும் ஜோடியாக சேர்த்து ஜட்ஜ்கள் கிண்டலடித்த வண்ணம் இருப்பார். ஆனால் இருவரும் இதை மறுத்து நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் அந்த சீசனின் வெற்றியால் அதில் பங்கேற்ற பலர் திரை துறைக்கு வந்துவிட்டனர். தற்போது ஜாக்லின் அவர்களும் ஒரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அது நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படம்தான். இந்த படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக வருகிறார் ஜாக்லின். படத்தில் இவருக்கு கலகலப்பான வேடமாம்.

இவரது கரகர குரலே எந்த வாய்ப்பை தனக்கு பெற்றுத்தந்ததாக மகிழ்ந்துள்ளார் ஜாக்லின். சைடு கேப்பில் ரக்சனுக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு சிபாரிசு செய்து வருகிறாராம் ஜாக்லின்.