tasmac1_Cinemanews

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும், சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாலும் சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

அதிகம் படித்தவை:  சூர்யாவின் S3 படம் எப்போது ரிலீஸ் ?

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் அகற்றப்பட்டது. இது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. பொதுமக்கள், பெண்களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் தற்போது குறைவான மதுக்கடைகளே உள்ளதால் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர்.

அதிகம் படித்தவை:  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.! புகைப்படம் உள்ளே.

இப்படி போனால், தெரு தெருவாக ஐஸ் விற்கும் வண்டியைப் போல டாஸ்மாக் சரக்குகளும் விற்பனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.