ரொமான்ஸ் பண்ண ஹீரோயின் தேவை இல்ல.. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரண ஹிட்டடித்த 8 படங்கள்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு கதாநாயகிகளே இல்லாத தமிழ் சினிமா. தமிழ் ரசிகர்களில் ஒரு கூட்டம் படத்தில் வரும் கதாநாயகி இருக்கவே தியேட்டருக்கு வரும். பெரும்பாலும் அவர்களுக்கு என்று நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத போதிலும் பாடல்கள் கவர்ச்சி காட்டவும் காதல் காட்சிகளில் வந்து போகும் நிச்சயம் கதாநாயகிகள் தேவை. அதையும் மீறி சில நல்ல இயக்குனர்கள் நல்ல பெண் கதாபாத்திரங்களை படைக்கவும் தவறுவதில்லை. இந்த தொகுப்பில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் இல்லாத அல்லது முக்கியத்துவம் இல்லாத திரைப்படங்கள் சிலவற்றைக் காணலாம்.

ஆரண்ய காண்டம்: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் பெருமளவு ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. காலப்போக்கில் படத்தின் நேர்த்தியான திரைக்கதை ஆளும் திருந்த நடிப்பாலும் வாய்வழியாக நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்தை தயாரித்த எஸ் பி பி சரண் மீண்டும் ஒருமுறை திரையரங்கில் இந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்ய முயன்றார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லாத போதும் முக்கியத்துவம் வாய்ந்த பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். சிங்கராயன் இடம் மாற்றிக்கொள்ளும் பெண்ணாக யாஸ்மின் நடித்திருந்தார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: மிஸ்கின் எழுதி இயக்கி நடித்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் மிகவும் பிரபலமானது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இருந்தபோதும் இந்த திரைப்படத்தில் பாடல்களும் கிடையாது படத்தின் கதாநாயகியும் கிடையாது. கதைப்படி மருத்துவ மாணவன் ஒருவனிடம் மாட்டிக்கொள்ளும் பெயிட்கில்லர் தான் செய்த தவறுக்காக வருந்தி நல்லது செய்ய முயலும்போது அவனை விடாது துரத்தும் வில்லன்களை பற்றியது. ஓரளவுக்கு கவனமே பெற்ற திரைப்படம் சுமாரான வசூலைப் பெற்றது. மிஷ்கின் இயக்கிய மற்றொரு திரைப்படமான யுத்தம் செய் திரைப் படத்திலும் கதாநாயகி என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.

ஒத்த செருப்பு: நடிகர் இயக்குனர் கதாசிரியர் என்று பன்முகம் கொண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் பல உலக சினிமா விழாக்களில் கௌரவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் இவர் மட்டுமே நடித்திருந்த காரணத்தால் மற்ற கதாபாத்திரங்கள் என்று யாரும் கிடையாது. சின்ன கல்லு பெத்த லாபம் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பார்த்திபனுக்கு நல்ல ஒரு வருமானத்தை கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இந்த திரைப்படம் பல விருதுகள் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

துருவங்கள் பதினாறு: சமீபத்தில் வந்த நல்ல கிரைம் இன்வெஸ்டிகட் திரைப்படமான துருவங்கள் பதினாறு படத்தை கார்த்திக் நரேன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதையை அமைத்து இருந்ததால் படம் சில வாரங்களிலேயே பிக்கப் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் ரகுமான் அவர்கள் சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் மூலம் கவர்ச்சி புயல் யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்

உன்னைப்போல் ஒருவன்: ஏ வெட்னஸ்டே என்ற ஹிந்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழாக்கம் தான் உன்னை போல் ஒருவன். கமல்ஹாசன் மோகன்லால் லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்ரி இயக்கியிருந்தார். வெடிகுண்டு ஒன்றை ரிமோட் மூலம் வெடிக்க செய்து விடுவதாக அச்சுறுத்தி தீவிரவாதிகளை ரிலீஸ் செய்ய முயலும் ஒருவனது கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றது. கமலுக்கும் மோகன்லாலுக்கும் இடையே நடக்கும் விவாதங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு இசை ஸ்ருதி ஹாசன். இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை.

கைதி: சமீபத்தில் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது கைதி. சோர்ந்து போய் கொண்டிருந்த கார்த்தியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் போதைப்பொருளை பாதுகாப்பாக வைக்க முயலும் நல்ல போலீஸ்காரருக்கும் அன்றுதான் ரிலீஸ் ஆகியிருக்கும் கைதிக்கும் இடையில் நடக்கும் பிணைப்பு தான் கதைகரு. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை.

டிமான்டி காலனி: வித்யாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி கதாநாயகனாக நடித்த திரைப்படம் டிமான்டி காலனி. இது ஒரு ஹாரர் திரைப்படம். மற்ற சிரிப்பு பேய் போன்று இல்லாமல் இந்த திரைப்படம் நல்லதொரு பேய் படமாக அமைந்தது. மேலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியாக இந்தப்படம் அறிவிக்கப்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கிய இத்திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை.

குருதிப்புனல்: கமல்ஹாசன், நாசர், அர்ஜுன், கௌதமி மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் குருதிப்புனல். நக்சல் ஒருவரை பிடித்து பின்பு அவரிடம் நடத்தப்படும் விசாரணைகள் தங்களுடைய கொள்கைக்காக எந்த எல்லை வரை வேண்டுமாலும் செல்லும் விதத்தில் இருக்கும் நக்சல்களிடம் இருந்து தங்களது குடும்பத்தை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியாக கமலும் அர்ஜுனும் நடித்திருந்தார்கள். நாசர் அவரது திறமையான நடிப்பை இந்த படம் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். பிசி ஸ்ரீராம் இயக்கிய இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை பாடல்களும் கிடையாது.