சூப்பர் ஹிட் சீரியல் இயக்குனரை மீண்டும் கூட்டி வந்த சன் டிவி.. அட நம்ம தேவயானி டைரக்டரு!

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் மாபெரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த தேவயாணி திடீரென சன் டிவி சீரியலில் நடித்து அதிலும் வெற்றி கண்டார். அந்த சீரியலின் இயக்குநர் தற்போது மீண்டும் சன் டிவியில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம்.

கடந்த சில வருடங்களில் வேண்டுமானால் சன் டிவி சீரியலில் கொஞ்சம் பின் தங்கி இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் சீரியல் என்றால் சன் டிவிதான் என்பது அனைவருமே ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை தான்.

சித்தி, கோலங்கள், திருமதி செல்வம் என இன்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதிலும் மெட்டி ஒலி எல்லாம் வேற லெவல் வெற்றி பெற்றது.

தற்போது கொஞ்சம் சீரியல் தயாரிப்பில் அடிவாங்கி இருக்கும் சன் டிவிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தங்களுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியலான கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் என்பவர் மீண்டும் சன் டிவியில் சீரியல் இயக்க உள்ளாராம்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற ஒரு சீரியலை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம். மேலும் இந்த சீரியல் குறிப்பிட்ட ஐந்து பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் எனவும், முழுக்க முழுக்க காமெடி அம்சங்கள் கலந்த சீரியலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியல் மட்டும் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் சீரியல் டிஆர்பி-யில் விட்டதை பிடித்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறதாம் சன் டிவி நிறுவனம். ஊரடங்கு முடிந்தவுடன் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

devayani-cinemapettai
devayani-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்