விஜய் ஆண்டனி புது இளம் இயக்குனர்களின் திறமைகளை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என நிறைய பேருக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறார். அப்படித்தான் இப்பொழுது நிறைய புதுமுக இயக்குனர்களை அழைத்து அவர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
2017ஆம் ஆண்டு முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உற்றுப் பார்க்க செய்தார் இயக்குனர் ஒருவர். ஆனால் அதன்பின் தமிழ் சினிமா அவருக்கு போதிய வரவேற்பு கொடுக்கவில்லை, சினிமாவை விட்டே விலகி விட்டார். இப்பொழுது அவரை அழைத்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, அவரின் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
அருண் பிரபு புருஷோத்தமன் எனும் இயக்குனர் 2017ஆம் ஆண்டு தமிழில் இயக்கிய படம் அருவி. கோடம்பாக்கத்தில் உள்ள மொத்த திரைத்துறையினரும் இந்த படத்தை பார்த்து மிரண்டனர். அதுவும் போக இந்த படத்தில் நடித்த ஹீரோயின் அதிதீ பாலன் மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். அந்த படத்தோடு இயக்குனர். மற்றும் ஹீரோயின் இருவரையும் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
7 வருடம் கழித்து விஜய் ஆண்டனி கொடுத்த வாய்ப்பு
அருவி பட இயக்குனர் சுமார் 7 வருடம் கழித்து இப்பொழுது விஜய் ஆண்டனியை வைத்து சைலன்டாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த படம் 2025 ஏப்ரல், மே விடுமுறையில் வெளி வர இருக்கிறது. இடையில் இந்த இயக்குனர் வாழ் என்ற ஒரு படத்தை எடுத்து மொக்கை வாங்கினார்
அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி .ஏற்கனவே சூது கவ்வும், பிசா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் எடிட்டராக வேலை செய்த லியோ ஜான்பாலுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவர் எடிட்டர் மட்டுமின்றி நல்ல திறமையான ஒரு இயக்குனரும் கூட, அவரையும் அழைத்து அவருக்காக ஒரு படம் பண்ணுகிறார் விஜய் ஆண்டனி.
- விஜய் ஆண்டனியை வம்புக்கு இழுக்கும் மண்ட கோளாறு
- விஜய் ஆண்டனிக்கு எதிரா ஒன்னு கூடிய அரைவேக்காடுகள்
- பிச்சைக்காரனில் சம்பாதித்ததை மொத்தமாய் இழந்த விஜய் ஆண்டனி