லாக் டவுன் நேரத்தில் வீட்டில் பார்க்க வேண்டிய அஜித் படங்கள்..

இந்த லாக் டவுன் சமயத்தில் தல அஜித்தின் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படங்களின் வரிசைகளை பார்த்து, இந்த சூப்பர்ஹிட் படங்களின் மூலம் நேரத்தை செலவிடலாம்.

தீனா:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தீனா. இந்த படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்தாலும் தற்போது வரை இந்த படத்தின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிகமாக ரசிக்கப்படுகிறது. அஜித்திற்கு அண்ணனாக பிரபல நடிகரான சுரேஷ் கோபி நடித்திருப்பார் காதல் சண்டை காட்சி ரவுடிசம் என்று இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பில்லா:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஆன பில்லா படம். ரசிகர்களிடையே இன்றளவும் ரிபிட் மோடில் பார்க்கக்கூடிய படம், யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கொடுத்தது. இந்த படத்தில் பிரபு, நமீதா, ஆதித்யா மேனன், சந்தானம் போன்ற பிரபலங்களும் நடித்திருப்பார்கள்.

கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

என்னை அறிந்தால்:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி போன்ற பிரபலங்கள் நடித்து ஹிட்டான படம். இந்த படம் 60 கோடி வரை பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் 96 முதல் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் தல அஜித் மற்றும் அருண்விஜய் ஆடுபுலி ஆட்டம் ஆடி இருப்பது ரசிகர்களிடம் இன்றளவும் பாராட்டை பெற்று வருகிறது.

வரலாறு:

தல அஜித்தின் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் வரலாறு. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசின், கனிகா ஆகியோர் நடித்திருப்பார்கள். ரஹ்மான் இசை, இன்றளவும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தல அஜித் ஹிட் கொடுத்த படம். 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வரலாறு படம் பாக்ஸ் ஆபீசில் 65 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

சிட்டிசன்:

சரவணா சுப்பையா இயக்கத்தில் தல அஜித், மீனா, வசுந்தரா தாஸ் போன்ற பிரபலங்களின் நடிப்பில் மாஸ் ஹிட்டான படம் சிட்டிசன். இந்த படத்தில் தல அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் என்றே கூறலாம். ஒரு மீனவ கிராமம், அரசியல் சூழ்ச்சியினால் அளிக்கப்பட்டு அதற்காக தல அஜித் போராடுவது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும், இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய படம் சிட்டிசன்.

முகவரி:

தொட்டி ஜெயா,இருட்டு போன்ற படங்களை தயாரித்த துரை இயக்கி வெற்றி கண்ட படம் தான் முகவரி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருப்பார் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுவரன், மணிவண்ணன் ஆகியவர்கள் நடித்திருப்பார்கள்.