Tamil Cinema News | சினிமா செய்திகள்
90 படம் தயாரித்தும் மகனே கரை சேர்க்க முடியவில்லை.. வருத்தத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்பு கொடுத்தவர் ஆர்பி சவுத்ரி.
அன்றைய காலகட்டங்களில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்று வந்தன.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் அனைத்துமே குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதன் காரணமாகத்தான் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சேர்த்து கிட்டத்தட்ட 90 படங்கள் தயாரித்து விட்டார் ஆர்பி சவுத்ரி.
ஆர்பி சவுத்ரி மகன்களான ஜீவா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தனர்.
ஆனால் ஜீவாவை ஏற்றுக் கொண்ட அளவுக்கு ரமேசை ஏற்றுக்கொள்ளவில்லை ரசிகர்கள். இருந்தாலும் ஜீவாவும் தட்டுத்தடுமாறி கொண்டுதான் இருக்கிறார்.
ஊருக்கே படியளந்த மகாராசன் வீட்டில் ஒரு மகனை கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே என ஆதங்கத்தில் இருக்கிறாராம் ஆர்பி சவுத்ரி.

jithan-ramesh-bigg-boss-4
