Videos | வீடியோக்கள்
உசுரு போன ம***ரு போச்சின்னு..விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ட்ரைலர்.!
Super Deluxe Trailer : சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு ஆறு ஏழு படங்களுக்கு மேல் வெளியிடுவார் தற்போது இவர் சமந்தாவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா தான் இயக்கியுள்ளார்.
கதாபாத்திரங்கள்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் என பலர் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
சூப்பர் டீலக்ஸ்
விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் ஷில்பா என்ற பெயரில் நடித்துள்ளார், சமீபத்தில்தான் சூப்பர் டீலக்ஸ் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தது, இந்த நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை செகண்ட் லுக் போஸ்டரை வைத்து வெளியிட்டார்கள்.
மேலும் நடிகை சமந்தா டீசர் இன்று வெளியாகும் என தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் அதேபோல் தற்போது டீசரும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு சமந்தாவுடன் இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
