தியாகராஜன் குமாரராஜா

தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் ஆரம்பித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவரே. இப்படத்திற்கு முதலில் அநீதிக் கதைகள் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நீக்கிய சமயத்தில் பணத்தட்டுப்பாட்டால் ஷூட்டிங் தடை பட்டது.

thiagarajan-kumararaja-to-team-up-with-vijay-sethupathi-fahadh-faasil
Super Deluxe

சூப்பர் டீலக்ஸ்

பின்னர் “சூப்பர் டீலக்ஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் என்று பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.விநோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

vijay-sethupathy – super deluxe

ஷில்பா என்ற திருநங்கையாக விஜய்சேதுபதி. வேம்பு என்ற அதிரடி பெண்ணாக சமந்தா. கொடூர வில்லியாக ரம்யாகிருஷ்ணன். சர்ச் பாதர் வேடத்தில் இயக்குனர் மிஸ்கின் என்று நாளொரு விதமாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். இப்படம் குறித்த தகவல்கள் யாவுமே புதுமையாக இருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

Samantha

கேன்ஸ் திரைப்பட விழா

தற்பொழுது வேகமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து, திரைப்பட விழாவுக்கான எடிட்டிங்கை செய்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாராம் தியாகராஜன் குமாரராஜா.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

வாழ்த்துக்கள் சார்.