fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் – முதல் காட்சியை பார்த்து மிரண்டு போய் ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்..!

super deluxe

News | செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் – முதல் காட்சியை பார்த்து மிரண்டு போய் ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்..!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இன்று  வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன்,  மற்றும் இயக்குனர் மிஸ்கின் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

8 வருடங்களுக்குப்பின் தியாகராஜன் குமரராஜா என்ற இயக்குனரால் உருவாக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான முன்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே நள்ளிரவு காட்சிகளுக்காக காத்துக் கொண்டிருந்தனர். இப்படத்தில் முக்கியமாக விஜய்சேதுபதி மூன்றாம் பாலினத்தவர் போல் அளித்துள்ளது  வரவேற்கத்தக்கதாகும்.

அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கைச் சூழ்நிலை மற்றும் மாற்றங்களை தத்ரூபமாக இப்படம் வெளிக்கொண்டு வரும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நல்லிரவு காட்சியைப்பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் இயக்குனர் பதிவிட்டுள்ளார். இதில்   இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டீலக்ஸ் படம் அற்புதம் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top