ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எடுத்துள்ள படம். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்கின், நீலன் கே சேகர் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். நிரவ் ஷா மற்றும் பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யராஜ் நடராஜன் எடிட்டிங்.
திருநங்கையாக விஜய் சேதுபதி, போலீசாக பகவதி பெருமாள், வேம்பு என்ற ரோலில் கொலை செய்யும் சமந்தா, ப்ளூ பிலிம் நடிகையாக ரம்யா கிரிஷ்ணன் என்று இதுவரை பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் படத்திற்கு தணிக்கை குழு எந்த வித கத்தரிப்பும் இல்லாமல் A சான்றிதழ் கொடுத்தனர் . மேலும் இப்படத்தின் ஓடும் நேரம் 2 மணிநேரம் 56 நிமிடங்களாம். (175 . 47 )
இந்நிலையில் வெளிநாடுகளிலும் இப்படம் ரிலீசாகிறது. அங்கு இப்படத்திற்கு 18 + தான். அங்கிருந்து வெளியான தகவல்களை வைத்து இரண்டு ட்ராக்குகளின் கதை தெளிவாக புரிகின்றது.


ஷில்பா – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
ஒரு ட்ராக்கில் திருநங்கையாக விஜய் சேதுபதி, படும் துயரங்கள், இன்னல்களை காட்டுகின்றனர். மேலும் ஷில்பாவை தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு மிரட்டும் போலீசாக பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் நடித்துள்ளார்.
எனினும் கிளைமாக்சில் ஷில்பாவை அவரது குடும்பமே மீண்டும் ஏற்றுக்கொள்வது போல பாசிட்டிவாக முடித்துள்ளாராம் இயக்குனர்.
வேம்பு – சமந்தா
புது மண தம்பதிகள் ரோலில் சமந்தா மற்றும் பாஹத் பாசில் நடித்துள்ளனர். இதில் சமந்தாவின் முன்னாள் காதலன் மீண்டும் அவளை சந்திக்க வருகிறான். அவர்கள் உடல் உறவில் மீண்டும் ஈடுபடுகின்றனர். அவனை கொலை செய்து விடுகிறாள். கணவன் – மனைவி இருவரும் எவ்வாறு அந்த டெட் பாடியை மறைக்கின்றனர் என்பதே இவர்களின் கதை.

சுனாமியில் இருந்து உயிர் தப்பி பிழைத்து வந்த மிஸ்க்கின் தனியாக ஒரு மதம் ஆரம்பிக்கிறாராம், அதனால் அவர் என்ன ஆகிறார் என்பது அவரின் ட்ராக். ப்ளூ பிலிம் வீடியோ பார்க்க செல்லும் பசங்களுக்கு நேரும் நிலை என்ன என்பது தனி டிராக். ஏழு வருடம் கழித்து மீண்டும் தன் மகனை பார்க்க வரும் தந்தை என்பது அடுத்த ட்ராக்காம்.

ஆகமொத்தத்தில் ஆந்தாலஜி ஜானரில் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் முறை என்று சொல்லியுள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா என்பது மட்டும் உறுதியாகிறது.


எனினும் கதை ஓட்டத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அநீதிக்கதைகள் என்பதே ஏற்ற தலைப்பாக இருந்திருக்குமே என தோன்றுகிறது. எனினும் ஏன் சூப்பர் டீலக்ஸ் என தலைப்பு வைத்தார் என்று இயக்குனரை யாரவது சந்தித்தால் சினிமாபேட்டை சார்பில் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ..